தலைமைச் செயலகம் எதிரே திடீர் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவதி

துறைமுகம் அருகே உள்ள நிலையில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டது.
தலைமைச் செயலகம் எதிரே திடீர் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவதி
Published on

சென்னை தலைமைச் செயலகம் எதிரே திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. அப்பகுதியில் பரவிய வாயுவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

துறைமுகம் அருகே உள்ள நிலையில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர். ஒரு சிலருக்கு இருமலும் வாந்தியும் ஏற்பட்டது.

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து சல்பேட் வாயுக்கசிவு என தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com