திருச்சி மத்திய சிறையில் 2 தண்டனை கைதிகள் திடீர் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

சுப்ரமணியன் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் குளித்துக்கொண்டிருக்கும்போது சதீஷிற்கு திடீரென வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார்.
திருச்சி மத்திய சிறையில் 2 தண்டனை கைதிகள் திடீர் உயிரிழப்பு- போலீசார் விசாரணை
Published on

திருச்சி:

திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 9-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக நேற்று இறந்து விட்டார்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு செய்தி...

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன். இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ந் தேதி ஜெயிலில் குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார்.

ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு சதீஷ் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இறந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com