கோடியக்கரையில் உருவான திடீர் மணல் குன்றுகள்: வலைகள் மண்ணில் புதைவதால் மீனவர்கள் கவலை

மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கோடியக்கரையில் உருவான திடீர் மணல் குன்றுகள்: வலைகள் மண்ணில் புதைவதால் மீனவர்கள் கவலை
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

இதனால் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

இந்த திடீரென்று உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மீன்பிடி வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

இந்த 6 மாத சீசன் காலத்தில் நாகை,திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் துவங்கப்படவில்லை இதற்கு காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com