9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

சென்னை:

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும். 26-ந்தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com