அரசியலில் ஈடுபடுகிறேனா? ஸ்ரீதர் வேம்பு அளித்த பதில்

எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது. அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.
அரசியலில் ஈடுபடுகிறேனா? ஸ்ரீதர் வேம்பு அளித்த பதில்
Published on

தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து சமீபத்தில் ஸ்ரீதர் வேம்பு விலகினார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50-க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதற்கிடையே, ஸ்ரீதர் வேம்பு அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு "செய்தி" பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது!

அடுத்த வாரம் ஆஸ்டினில் உள்ள தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை வழங்க நான் கடுமையாகத் தயாராகி வருகிறேன். ஆம், நான் அங்கு செல்வேன்.

ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது. மேலும் அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.

நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் இதுவரை பேசியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com