தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளதுரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை:

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 28-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 30-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.10 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு 28-ந்தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com