வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்

மூன்று மாவட்டங்களில் வரும் 11ம் தேதி சிறப்பு முகாம்.சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்.
வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்
Published on

மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதியும், சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com