தேஜஸ் ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல கோரிக்கை.
தேஜஸ் ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com