தொடர் விடுமுறை எதிரொலி: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை எதிரொலி: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை:

சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் (16-ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 17-ம் தேதி புறப்பட்டு (18-ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com