சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல்- பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு

யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல்.
சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல்- பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு
Published on

சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுக்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலையில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவருக்கு சம்மன் அனுப்பி சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com