எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

போதைப் பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்த நாய்.போதை பவுடர் கடத்தலில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண் கைது,
விமான நிலையம், அதிகாரிகள் சோதனை
விமான நிலையம், அதிகாரிகள் சோதனை
Published on

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து போதை பவுடரை கடத்தியதாக உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com