தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை
Published on

பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

இதில், கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்த ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்குச்சாட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com