சுருள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்

சுர்ஜித் பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
சுருள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் சுர்ஜித் (வயது 11). காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியில் உள்ள பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் திருப்பத்தூரில் அண்மையில் மாநில அளவில் நடந்த சிலம்பத்தின் துணை விளையாட்டான சுருள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு 4 கிராம் அளவில் வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த மாணவர் இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒற்றைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றவர். இந்த மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com