அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: கோவை, சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ‌இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: கோவை, சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
Published on

அரக்கோணம்:

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மேலும் 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ‌இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்ட பிறகு 40 நிமிடம் தாமதமாக இந்த ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. தொடர்ந்து சிக்னல் கோளாறு இல்லாமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com