விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து சீர்காழி பகுதியில் கடை அடைப்பு

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து சீர்காழி பகுதியில் கடை அடைப்பு
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com