தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்- பெற்றோர்கள் கண்டனம்

பள்ளி மாணவிகள், சமையல் பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்-  பெற்றோர்கள் கண்டனம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் காலை உணவு அருந்திய பள்ளி மாணவிகள், சமையல் பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெற்றோர்கள் மாணவிகளை பாத்திரங்களை கழுவும் பணியில் ஈடுபட வைத்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதேபோல், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அந்த உண்டு உறைவிட பள்ளியில் பணியாற்றும் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com