14வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
14வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி 14-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com