செந்தில் பாலாஜி வழக்கு- சிறப்பு நீதிபதி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை.விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
செந்தில் பாலாஜி வழக்கு- சிறப்பு நீதிபதி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

மனு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com