ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம்-சாலை சீரமைக்கும் பணி: செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம்-சாலை சீரமைக்கும் பணி: செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
Published on

கூடுவாஞ்சேரி:

வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com