மாட்டிறைச்சியுடன் சென்ற மூதாட்டி... இறக்கி விட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது வழக்கு

பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமைஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மாட்டிறைச்சியுடன் சென்ற மூதாட்டி... இறக்கி விட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது வழக்கு
Published on

மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com