பள்ளி மாணவி தற்கொலை முயற்சி- விடுதி வார்டன் மீது வழக்கு போலீசார் நடவடிக்கை

விடுதியில் வார்டனாக பணிபுரிந்துவரும் நித்யா என்பவர் மாணவியை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. தாரமங்கலம் போலீசார் விடுதி வார்டன் நித்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை முயற்சி- விடுதி வார்டன் மீது வழக்கு போலீசார் நடவடிக்கை
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை கிராமம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மாணவி உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் 25-ந்தேதி முதல் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு விடுதியில் தங்கி படித்து வந்தார்.

அந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்துவரும் நித்யா என்பவர் மாணவியை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியில் இருந்து விடுதிக்கு வந்தவுடன் தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பூச்சி கொல்லி விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்தார்.

இதுபற்றி தனது தோழியிடம் கூறி மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், அவரை மீட்டு வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விடுதி வார்டன் நித்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com