கல்வி உதவித்தொகை: பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
கல்வி உதவித்தொகை: பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
Published on

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com