தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும் மாநில எல்லை பகுதிகளில் பறக்கும்படை சோதனை நீடிக்கும்

நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம்.வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும் மாநில எல்லை பகுதிகளில் பறக்கும்படை சோதனை நீடிக்கும்
Published on

சென்னை:

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும்.

பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன. எனவே கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது. வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com