திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை

மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.
திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
Published on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளைஞர் தினேஷ் (23) என்பவரை 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சலூன் கடை நடத்தி வரும் தினேஷை காரில் வந்த மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.

பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தினேஷ் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com