

சேலம்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு துறையில் 8 உதவி இயக்குநர் தணிக்கை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு வயது வரம்பு கிடையாது.
இட ஒதுக்கீடு இல்லாத பிற வகுப்பினர் விண்ணப்பிக்க வயது 30-க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி எம்.ஏ. கூட்டுறவு அல்லது எம்.காம் கூட்டுறவு துறை பாடம் படித்திருக்க வேண்டும் அல்லது சி.ஏ. படித்திருக்க வேண்டும். இந்த பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தாள் ஒன்றுக்கான தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தாள்-2 தேர்வும் நடைபெறும்.
இந்த தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்த்தல், வாய்மொழித் தேர்வுக்கு பின் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.