நரசிங்கபுரம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் நகராட்சியில் தி.மு.க.வின் பலம் 10 ஆக உயர்ந்தது.
.
.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.  இங்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றிருந்தனர். 

அதிக இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. நகராட்சியை கைப்பற்றியது.  இந்த நிலையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற சுப்பிரமணி, 10-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வம் ஆகிய இருவரும்  சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதன் மூலம் நகராட்சியில் தி.மு.க.வின் பலம் 10 ஆக அதிகரித்து உள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் 2 பேர் உள்ளதால் இங்கு தி.மு.க.வை சேர்ந்தவர் தலைவர் ஆவது உறுதி ஆகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com