மத்திய அரசு பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவு வருகிற 28-ந்தேதி வெளியாகிறது.

மத்திய அரசு பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் வருகிற 28-ந் தேதி வெளியாகிறது.
.
.
Published on

சேலம்:

எஸ்.எஸ்.சி.எனப்படும் இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தி தகுதியான நபர்களை அரசு பணிக்கு தேர்வு செய்கிறது.

அந்த வகையில் தொழில் நுட்பம் சாராத அரசு அலுவலர்களை தேர்வு செய்வதற்கான மல்டி டாஸ்கிங்   தேர்வு 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டது. 

இதனை தொடர்ந்து தாள்-1 எழுத்துத்தேர்வு  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வு மையத்தில் 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு, பட்டம், முதுநிலை பட்டம் படித்த ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். 

இதையடுத்து தேர்விற்குரிய விடைகுறிப்புகள், விண்ணப்பதாரர்கள் எழுதிய தாள்-1 விடைத் தாள் ஆகியவை வெளியிடப்பட்டது. விடைத்தாளை பலர் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் இத்தேர்வுக்குரிய முடிவுகள் நாளை மறுதினம் (28-ந்தேதி) வெளியிடப்படுகிறது. 

அன்று தேர்வர்கள் எஸ்.எஸ்.சி. இணையதளத்தில் தங்களுடைய பதிவேண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மேலும் மதிப்பெண் சான்றிதழை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இந்த தகவலை இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com