சேலத்தில் இருந்து விற்பனைக்கு செல்லும் 24 வண்ண கோலப்பொடிகள்

பொங்கல் பண்டிகைக்காக விற்பனை செய்ய 24 வகையிலான கலர் கோலப்பொடிகள் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வண்ண கோலப்பொடிகளை தயாரிக்கும் பெண்கள்.
வண்ண கோலப்பொடிகளை தயாரிக்கும் பெண்கள்.
Published on

சேலம்:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதற்கான பொருட்கள் வாங்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளனர்.சேலத்தில் பல இடங்களில் கலர் கோலப்பொடி விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் ஏராளமான கோலப்பொடி தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை குடோன்கள் உள்ளன. சேலத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, கோலப்பொடி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது;.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள வியாபாரிகள், அதிக அளவில், சேலத்தில் கோலப்பொடிக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால், கல்மாவு ஆலைகளில், வெள்ளை கோலப்பொடி தயாரிப்பு சூடு பிடித்துள்ள நிலையில், வண்ண கோலப்பொடி தயாரிப்பும் தீவிரம் அடைந்துள்ளது. 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், மொத்தமாக வெள்ளை நிற கோலமாவு மற்றும்  கலர் பொடிகளை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர்.   பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், கருநீலம், ரோஸ், கிளிப்பச்சை, கருப்பு உள்ளிட்ட 24 கலர்களில் கோலப்பொடிகளை  தயாரித்து வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com