வருகிற 10-ந்தேதி முதல் என்ஜினீயரிங் பணிகளுக்கு சான்றிதழ் பதிவேற்றம்

வருகிற 10-ந்தேதி முதல் என்ஜினீயரிங் பணிகளுக்கு இ சேவா மையங்கள் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
.
Published on

சேலம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  சார்பில் நெடுஞ்சாலைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி பதவிகள், பொதுப்பணித்துறை ஜூனியர் என்ஜினீரியங்,  கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் மீன்வளத்துறையில் ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தேர்வு 18-09-2021 அன்று நடத்தப்பட்டது. இதில் என்ஜினீயரிங் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று எழுதினர். இதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் 15-02-2022 அன்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுடைய  சான்றிதழ்கள் நகலை ஸ்கேன் செய்து பதிவேற்ற 10.03.2022 முதல் 18.03.2022 வரை ஆன்லைனில் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே அரசு  இ-சேவா மையங்கள் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com