22 பேருடன் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய பரபரப்பு வீடியோ

சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 பேருடன் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய பரபரப்பு வீடியோ
Published on

சேலம்:

ஈரோடு பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜா. இவர் இன்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று கொண்டிருந்தார்.

சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகின. பேருந்தில் பயணம் செய்த 22 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பேருந்த ரோட்டில் தாறுமாறாக வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com