எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
Published on

மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது, ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நூலான இந்நூல், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முதல் ஐம்பது ஆண்டுகால வரலாற்றையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் விரிவாக ஆராய்கிறது.

சுமார் 896 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வு நூல், தமிழ் சிறுகதை உலகின் முக்கிய மைல்கற்களைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 1913-ம் ஆண்டு முதல் 1970-கள் வரையிலான சிறுகதைகளின் போக்கை இது ஆவணப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com