மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன்- பிரதமர் மோடி

குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன்- பிரதமர் மோடி
Published on

இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.

இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.

சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், "நமது நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன்.

இதய மருத்துவத்தில் மருத்துவர் கே.எம்.செரியனின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com