நகைக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை- ஊழியர் கைது

என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர்.
நகைக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை- ஊழியர் கைது
Published on

ராயபுரம்:

பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மத் அப்துல் கலாம் அசாக் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 14-ந்தேதி முகமது அப்துல் கலாம் அசாக் நகைக்கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நரம் கழித்து கடையின் மேலாளர் பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 9 லட்சம் மாயமாகி இருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கமது அப்துல் கலாம் அசாக் பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com