மண்டபம் அருகே ரூ.53 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்- இலங்கைக்கு கடத்த திட்டமா?

வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் கடலோர காவல்படையினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் கடலோர காவல்படையினர்.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டை, தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

இதை தடுக்க கடலோர காவல்படை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மண்டபம் அருகே உள்ள வலையர்வாடி பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்தப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? அதனை பதுக்கி வைத்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 53 லட்சம் ஆகும்.

இந்தநிலையில் மண்டபம் அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். உடனே அதில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனையிட்டபோது 10 கிலோ கடல் அட்டை கடத்தியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com