

த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ளார். தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி நேற்று செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக ரூ.35 கோடி பேர வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீசில் ஆஜரானார். அவரிடம் இன்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விசாரணை நிறைவடைந்தது
செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.
வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.