போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு- 2 பேர் கைது

சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு- 2 பேர் கைது
Published on

சென்னை:

காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர்கள் லட்சுமி பாய், பத்மா பாய். இவர்களுக்கு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.

இவற்றை போலி ஆவணங்கள் மூலமாக கலைச்செல்வி, அன்பு, சுசீலா ஆகியோர் அபகரிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுபற்றி லட்சுமி பாய், பத்மா பாய் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலைச்செல்வி, அன்பு ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com