சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்- போலீஸ் விசாரணை

சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்- போலீஸ் விசாரணை
Published on

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com