பிறந்தநாள் அன்று பழிக்குப்பழி ? ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை ஆற்காடு சுரேஷ் உருவப்படத்தில் வைத்த கும்பல்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
பிறந்தநாள் அன்று பழிக்குப்பழி ? ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை ஆற்காடு சுரேஷ் உருவப்படத்தில் வைத்த கும்பல்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.

நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை வைத்ததகாக தகவல் வெளியாகியுள்ளது .

கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com