சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.
சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை ஒரு வழிப்பாதை ஆகும். இதனால் இந்த சாலை வழியாக எப்போதும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பஸ், லாரி என அனைத்து வாகனங்களும் செல்லும். அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று ஆண்குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ளது. பிறந்து 10 நாட்கள் மட்டும் இருக்கும் என்று தெரிகிறது. குழந்தையை வீசி சென்ற பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து இங்கு வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com