

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்க உள்ளதால், 57 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதிகாலை 4, 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆகிய 5 ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருச்சானூர் இடையே வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில், திருச்சானூர் - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில், அரக்கோணம் - வேலூர் இடையே பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில், வேலூர் - அரக்கோணம் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் ஆகி யவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதிகாலை 4.05, மதியம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை காலை 6.30, 9.10, 10.30, 11, பகல் 12.40, 1.25, 3.45, மாலை 4.45, 5.15, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதிகாலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, 11.15, பகல் 12, 1.40, 2.25, 3.40, மாலை 4.50, 6, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள், அரக்கோணத்துக்கு பதிலாக திருவாலங்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு செல்லும். இதுதவிர, அரக்கோணம் - சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 4 மின்சார ரெயில்களும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே தலா 2 மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.