

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியநிலையில், இன்று விடுதலையானார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 20 அன்று மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இனிவரும் காலங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசமாட்டேன் என்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கப்பட்டது.
நாளை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாட்களுக்கு மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.