ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள் - பார்ப்பவர்களை பதற வைத்த ரீல்ஸ்

சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள் - பார்ப்பவர்களை பதற வைத்த ரீல்ஸ்
Published on

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.

சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com