குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக குறைப்பு

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக குறைப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.

நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 57 கன அடியாக சரிந்தது.

இதற்கிடையே கோடை காலத்தில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் கடந்த 11-ந் தேதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இருப்பினும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடிக்கும் கீழ் தொடர்ந்து நீடிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.98 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com