8 அம்ச கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம்: ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

டார்ச்சர் காரணமாக ஒட்டு மொத்த நியாய விலைக்கடை பணியாளர்களும் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம்.
8 அம்ச கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம்: ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் முரண்பாடுகள் மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளின் கடுமையான மிரட்டல், ‘டார்ச்சர்’ காரணமாக ஒட்டு மொத்த நியாய விலைக்கடை பணியாளர்களும் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம்.

எங்களின் முக்கிய கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

* இ-கே.ஒய்.சி. எனப்படும் மின்னணு முறையிலான வாடிக்கையாளர் விவரங்கள் சரிபார்ப்பு நடைமுறையை செய்யாத பயனாளிகளின் கணக்குகளை முடக்கம் செய்து, கைரேகை வைத்தவுடன் தானாக ரிலீஸ் ஆகும் மென்பொருள் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* தாயுமானவர் திட்டப்பணிகளில் இருந்து புளுடூத் முறையை நீக்கி தனி பணியாளர்கள் மற்றும் பி.எஸ்.ஓ. கருவிகளை வழங்குதல்.

* பெண் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிகப் பணியாளர்க ளுக்கு சிறப்பு விலக்கு.

* 3 மாத பொருட்களை ஒரே தவணையாக வழங்க அனுமதி.

* ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதிக்கு பிறகே தாயுமானவர் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும்.

* தேர்தல் வாக்குறுதிபடி ‘பாக்கெட் முறையை’ விரைந்து நடைமுறைப்படுத்துதல்.

* டி.என்.சி.எஸ்.சி. கிடங்குகளில் இருந்து பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நடைமுறை களை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க வேண்டும்.

* மாநிலம் முழுவதும் ஒரே சீரான வேலை நேரம் கொண்டு வர வேண்டும்.

இந்த 8 அம்ச கோரிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் நிறைவேற்ற தவறினால் வரும் ஜூலை 1 முதல் மாநிலம் தழுவிய அளவில் தாயுமானவர் திட்டப் புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்படும்.

தமிழக முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு பணியாளர்களின் மன அமைதியை பாதுகாக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com