மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று- ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று- ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை என 2 கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன.

இதே போன்று பாக் நீரினை கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்குதளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com