65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.
65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on

ராமநாதபுரம்:

தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இன்று முதல் அடுத்த சில நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மாறுபாடு காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com