விரைவில் ரமணா 2- விஜயகாந்த் மகனுக்கு அழைப்பு விடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

படை தலைவன் திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படை தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விரைவில் ரமணா 2- விஜயகாந்த் மகனுக்கு அழைப்பு விடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்
Published on

மறைந்த கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியன், மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கதாநாயகனாக படை தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரெக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ சிலமாதங்களுக்கு முன் வெளியானது. படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படை தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்தார்.

அப்போது பேசிய அவர்," வளர்ந்து வாங்க.. ரமணா 2 எடுப்போம். அதில் நம்ம கேப்டனை திரும்ப காட்டுவோம்" என சண்முகபாண்டியனை நோக்கி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com