சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்- மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல்.
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்- மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை
Published on

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com