தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு: அன்னூரில் விவசாயிகள் நடைபயணம்

6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் எதிர்ப்பு.100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
அன்னூரில் பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகளை படத்தில் காணலாம்.
அன்னூரில் பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகளை படத்தில் காணலாம்.
Published on

அன்னூர்:

கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.

இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். மேலும் போராட்டக்குழு சார்பில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்து.

அதன்படி இன்று காலை அக்கரை செங்கப்பள்ளியில் இருந்து விவசாயிகள் தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கிய விவசாயிகள் நடை பயணம் கரியானூர், சோளவாம்பாளையம், ஆலங்குட்டை, குழியூர் வழியாக வடக்கலூரில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நடைபயணத்தின் போது கிராம மக்களிடம் இதுகுறித்து விரிவாக எடுத்து கூறினர்.

நடைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களை எடுக்கமாட்டோம் என்ற அரசின் அறிவிப்பில் தெளிவு இல்லை. எனவே விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை பாதுக்காக வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.அனைத்து விவசாய சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே விவசாயிகள் நடைபயணம் பற்றி அறிந்ததும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com