திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் சொகுசு பேருந்து- உயிர்தப்பிய பயணிகள்

சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது.தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.
திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் சொகுசு பேருந்து- உயிர்தப்பிய பயணிகள்
Published on

சென்னையிலிருந்து பெங்களூருக்கு 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் திடீரென பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.

சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி உயிர் தப்பினர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.

இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com